வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அக மாற்றம் ! -- குற்றாலத்தில் விழிப்பு PART 1

அக மாற்றம் ! குற்றாலத்தில் விழிப்பு

ஒரு மனிதனின் மன மாற்றத்திற்கு புறத்தில் பெரிய பிரளயம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை .

குற்றாலம் , என்னை ,என் வழியை திசை திருப்பியது என்று   சொல்லலாம் .
மன திடம் ,பற்று , வழி நடத்தல்,ஒழுக்கம்  ஆகிவைகளை தெரிய படுத்தியது.

உச்சி நோக்கி...


சரி அது என்ன மாற்றம் ..முன்பு நான் எப்படி? ..(பயம் வேண்டாம் சுருங்க சொல்கிறேன்).சராசரிக்கும் கொஞ்சம் மாற்று  கருத்துள்ளவன்.
அதாங்க !அதே  தான் !..தேய்ந்த சொல்லில் ஓட்டாதவன் (அட அட்வைஸ் பண்ணா அலறுவோர் சங்கம் ).
நம்மில் ஒருவனுக்குள் உள்ள அதே பிடிவாதம் , மத  நம்பிக்கையில் முரண்பாடு (அதாங்க காலையில் பெரியார் மாதிரி பேசிட்டு சாயங்காலம்  சிவன் கோவிலில் விபூதிய  வாங்கி  நல்லா  நெற்றியில நல்ல பெருசா போட்டுகிறது )


போதும்ல.. விஷயத்துக்கு வருவோம் .அதற்க்கு முன் ,இனி நான் சொல்ல போகும் விசயங்கள்  உங்களை  ஆன்மிக பாதையில்  அழைத்து  செல்ல அல்ல ....மனதை  திரிய வைப்பது என் வேலை ! உரு கொடுப்பது கண்டிப்பாக உங்கள் மனதின் வேலை .

                                                                                     அகநிலை...அலையும் (1)